எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை அருகே மாயமானவர் கால்வாயில் சடலமாக மீட்பு

சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பகுதியைச் சேர்ந்த மகன் தம்பிராஜ் (42). கூலித்தொழிலாளி. கடந்த 29 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், பின்னர் வீடுதிரும்பவில்லையாம். இதையடுத்து

News image
Updated On :31 ஆகஸ்ட் 2014, 12:35 pm

முத்துக்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே மாயமான தொழிலாளி கோடகன் கால்வாயில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.

சுத்தமல்லி அருகே உள்ள பழவூர் பகுதியைச் சேர்ந்த மகன் தம்பிராஜ் (42). கூலித்தொழிலாளி. கடந்த 29 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், பின்னர் வீடுதிரும்பவில்லையாம். இதையடுத்து அவரது மனைவி அம்பிகா சுத்தமல்லி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்தார். அப்போது கோடகன்கால்வாய் கரையில் அவரது உடைகள் கிடந்ததாம். இதையடுத்து போலீஸாரும், பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் கோடகன்கால்வாயில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும்பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் கொண்டாநகரத்தில் கோடகன்கால்வாயில் ஆண்சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரி்த்தபோது சடலமாகக் கிடந்தது தம்பிராஜ் என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.