கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
Updated on
1 min read

கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  நலச்சங்கத்தினர் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேனிவசந்தன், நகரச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உயர்கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும், மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com