விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி

இப்பேரணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லியாகத்அலி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் வைரமுத்து பேரணியினை
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர்.

இப்பேரணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லியாகத்அலி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் வைரமுத்து பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மத்திய அரசுக்கு இணையான 50 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெட்சுமிநாராயணன் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜமாலுதீன் வாழ்த்துரை வழங்கினார். மேலும், சமூக நலத்துறையின் அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் க.துரைசிங் நிறைவுரை வழங்கினார். விருதுநகர் கிளைச் செயலாளர் டி.செல்வம் நன்றி கூறினார்.

இப்பேரணியில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த 318 பெண்கள் உள்பட 600 பேர் பங்கேற்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com