.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
விருதுநகர் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் வட்டார அளவிலான (மெகாலோக் அதாலத்) 12 ஆயிரம் வழக்குகள் வரையில் சமரசம் செய்து தீர்வு காணப்பட்டது. அதோடு, கடன் மற்றும் அபராத தொகையாக பல்வேறு வழக்குகள் மூலம் ரூ.1.84 கோடி வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த வட்டார அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த முகாமிற்கு நீதிபதி எம்.இ.பத்மா, ஜே.எம்.1ன் நீதிபதி எம்.ப்ரீதா, ஜே.எம்.2ன் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தனர். மக்கள் நீதிமன்ற சமரச குழு தலைவராக முன்னாள் மாவட்ட கூடுதல் நீதிபதி கே.டி.ஸ்டாலின் செல்வராஜ், உறுப்பினர்கள் வழக்குரைஞர் எம்.எஸ்.அசோக், சமூக ஆர்வலர் அழகுசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்படாத நிலையில் உள்ள 500 வங்கி கடன் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 125 வழக்குகள் வரையில் சமரசம் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.90 லட்சம் வரையில் வசூல் ஆனாது. இக்கடன்கள் பாண்டியன் கிராம வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளின் கடன் சம்பந்தப்பட்ட வழக்காகும். இதேபோல், மோட்டார் வாகன விபத்துக்களில் 18 வழக்குகளில் சமரசம் செய்யப்பட்டு அதற்கான ரூ.37 லட்சம் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கும் வகையில் தீர்வு காணப்பட்டது.
மேலும், ஜே.எம்.1 நீதிமன்றத்தின் குற்றவியல் வழக்குகளில் அபராத தொகையாக ரூ.1.80 லட்சமும், காசோலை மற்றும் ஜீவனாம்ச வழக்குகளில் ரூ.52 லட்சமும், ஜே.எம்.2 நீதிமன்ற வழக்குகளில் ரூ.4 லட்சமும் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. எனவே இந்த 2 நீதிமன்றங்கள் மூலம் 12 ஆயிரம் வழக்குகள் வரையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் வட்டார சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் என்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.