வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் டிப்பர் லாரி மீது அரசு பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியில் 3 பேர் இறந்தனர். 38 பேர் காயமடைந்தனர்.
ஒசூரிலிருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பள்ளிகொண்டா அடுத்த காளப்புதூர் அருகே சென்றபோது மணல் லோடு ஏற்றிக் கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது அரசு பஸ் மோதியுள்ளது. அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பஸ்ஸிலிருந்த பயணிகள் கீழே இறங்கினர். பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பெங்களூரிலிருந்து வேலூர் நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ் நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியுள்ளது.
அந்த விபத்தில் பெங்களூர் பொம்மனஹல்லியை சேர்ந்த ரங்கநாதன் மனைவி மல்லிகா (40) சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மல்லிகாவின் கணவர் ரங்கநாதன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் செய்யாறு அடுத்த மேல்சீசமங்களம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் அபிதா (40) என்ற சிறுமி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இரு பஸ்களிலும் பயணம் செய்த மொத்தம் 38 பயணிகள் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது அருகில் இருந்த பொதுமக்கள் பள்ளிகொண்டா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு பள்ளிகொண்டா போலீஸாஆர் போக்குவரத்தை சீர் செய்தனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

