தொலைநோக்குடன் செயல்படவில்லை: நகராட்சி நிர்வாகம் மீது தேமுதிக குற்றச்சாட்டு

புதுக்கோட்டை நகர மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றும் வகையில்  தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாமல்  விளம்பர நோக்கில் செயல்படுவதாக தேமுதிக குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுக்கோட்டை நகர மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றும் வகையில்  தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாமல்  விளம்பர நோக்கில் செயல்படுவதாக தேமுதிக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேமுதிக மாவட்டச்செயலர் க. ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை நகராட்சியில்  நூற்றாண்டு விழா நிதியின் கீழ் புதிய அலுவலகக் கட்டுமானப் பணியை தவிர பெயர் சொல்லும் அளவிற்கு எந்த பணிகள் இல்லை. சிதிலமடைந்த மழைநீர் வரத்து வாரிகளை  தூர்வாரியும் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவதற்காக குளங்களை தூர்வாறுவது போன்ற பணிகளை மேற்கொள்ளவில்லை. தூர்வாரப்பட்ட சில குளங்கள் தற்போது கழிவுநீர்  குட்டைகளாக மாறியுள்ளது நினைக்கும் போது தொலைநோக்கு பார்வையுடன் நகராட்சி நிர்வாகம் செயல்படவில்லை என்பதையே உணர்த்துகிறது. புதுக்குளம்  பொழுது போக்கும் இடமாக மாறுவதற்கும் அழகுப்படுத்தப்பட்டும்உரிய பராமரிப்பின்றி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேற்றுதல்,  கொசு ஒழிப்பு, குடிநீர் பிரச்னை, தெருவிளக்குகள் சரிவர எரியாதது உள்ளிட்ட அடிப்படைப்பிரச்னைகளைத் தீர்க்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அடிப்படைவசதிகளை நிறைவேற்ற நகராட்சிநிர்வாகம் முனைப்பு காட்டவில்லை.ஆனால் பொதுமக்களின் புகாரை களைவதற்காக நகராட்சி மணி என்ற தொலைபேசி சேவைத் திட்டத்துக்காக ரூ 4 லட்சம் செலவு செய்துள்ளது கண்டிக்கதக்கது. விளம்பர நோக்கிற்காக நிகழ்ச்சியை நடத்தியதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணில் வருகின்ற புகார்களை முழுமையாகக் களைய முடியுமா. ஏற்கனவே   காலிப்பணியிடங்களை காரணம் காட்டி வரும் நகராட்சி நிர்வாகம் தொலைபேசியில் வந்த புகார்கள் அனைத்தையும் உடனடியாகக் களைந்து விட முடியாத நிலைதான் உள்ளது. 

விஞ்ஞான வளர்ச்சியில் இ.மெயில்,  வாட்ஸ் அப், பேஸ்புக், எஸ்எம்எஸ் ஆகியவைகளுக்காக ரூ 4 லட்சம் செலவு செய்திருப்பது விளம்பர நோக்கத்துக்காக  மக்களின் வரிப்பணத்தை வீணடித்த நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு கண்டத்துக்குரியது என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com