விருதுநகரில் இருந்து நெல்லை-தூத்துக்குடி வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் மயமாக்கப்பட்ட பாதையில் சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ரயில்வே பாதுகாப்பு துறை ஆணையாளர் உள்ளிட்ட தொழில் நுட்ப அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர்-நெல்லை-தூத்துக்குடி வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணி 2010ல் தொடங்கி, தொடர்ந்து இந்தாண்டில் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பாதையில் தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு ரயில் மூலம் விருதுநகர் ரயில்வே நிலையத்திற்கு 9.40-மணிக்கு வந்தார்கள். அப்படியே அந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வழிப்பாதை சமமாக உள்ளதா என்றும், இடைப்பட்ட பகுதிகளான மருளூத்து, பட்டம்புதூர், துளுக்கப்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலங்களையும் ஆய்வு செய்தார். மேலும், ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் கடந்து செல்வதற்கான சாலை, அபாய வளைவு பகுதிகளையும் இறங்கி பார்வையிட்டார். அதையடுத்து, சாத்தூர் பகுதியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது, சிறப்பு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு துறை ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் உடன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி, கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் அஜித்குமார், ரயில் இயக்கக மேலாளர் எஸ்.டி.ராமலிங்கம் உள்ளிட்ட தொழில் நுட்ப அலுவலர்கள் அடங்கிய குழுவினர் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.