அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் நடந்து சென்ற ஆசிரியையிடம் 7 சவரன் நகை பறிப்பு: திருடர் கைது

விருதுநகர் அருகே நடந்து சென்று தொடக்கப்பள்ளி ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 7 சவரன் நகையை பறித்துச் சென்றவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On :10 டிசம்பர் 2014, 5:20 pm

விருதுநகர் அருகே நடந்து சென்று தொடக்கப்பள்ளி ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 7 சவரன் நகையை பறித்துச் சென்றவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் கணேஷ்நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி(41). இவர் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடம் விட்டு புதன்கிழமை மாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்தொடர்ந்து வந்த ஒருவர் திடீரென ஆசிரியையின் கழுத்தில் கிடந்த 7 சவரன் நகை பறித்தாராம். அப்போது, நகையை பறிக்க விடாமல் போராடிய ஆசிரியை சத்தம் போட்டு அக்கம் பக்த்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அதையடுத்து விரைந்து வந்த பொதுமக்கள் கையும் களவுமாக சுற்றி வளைத்து  பிடித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, போலீஸார் விசாரித்ததில் திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்புராஜ்(50) என்பதும், தற்போது விருதுநகர் லட்சுமிகாலனியில் குடியிருந்து வருவதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக மனோன்மணி புகார் செய்ததின் பேரில் வழக்கு பதிந்து போலீஸார்  கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.