விருதுநகர் அருகே ஆற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஒருவர் கைது

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி அர்ஜூனா ஆற்றுப்படுகை பகுதியில்  அனுமதியில்லாமல் மர்ம நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து காவல்
Updated on
1 min read

விருதுநகர் அருகே ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி திருட்டுத் தனமாக மணல் அள்ளியதாக ஒருவரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி அர்ஜூனா ஆற்றுப்படுகை பகுதியில்  அனுமதியில்லாமல் மர்ம நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீஸார் புதன்கிழமை அதிகாலையில் திடீர் ரோந்து சென்றனர்.

அப்போது, கெங்கை அம்மன் திருக்கோயில் பின்புறம் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. அதை போலீஸார் தடுத்து  நிறுத்தியதும் உடனே இறங்கி ஓட முயற்சித்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின் லாரியை சோதனையிட்டதில் உள்ளே ஆற்றுமணல் இருந்தது. அதையடுத்து விசாரணை செய்ததில் நடுவப்பட்டியைச் சேர்நத போத்திராஜ்(37), மிளகாய்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கா.கல்லுண்டான்(30), இ.முத்திலிங்காபுரத்தைச் சேர்ந்த குட்டி என்பதும், லாரியின் உரிமையாளர் நடுவப்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, போத்திராஜ் என்பவரை மட்டும் கைது செய்தனர். மேலும், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com