ரஜினிகாந்த் பெயரில் அரசியல் கட்சி

ரஜினிகாந்தின் ஆதரவு பெற்ற மன்றங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஆனால், ரஜினிகாந்தின் ஆதரவோ, நிதியுதவியோ எதுவும் கிடைக்காமல், திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த் பெயரில் அரசியல் கட்சி

ரஜினிகாந்தின் ஆதரவு பெற்ற மன்றங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஆனால், ரஜினிகாந்தின் ஆதரவோ, நிதியுதவியோ எதுவும் கிடைக்காமல், திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இதற்கும், ரஜினி ரசிகர் மன்றங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரஜினிக்கும் இந்த சங்கத்துக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை. இவர்கள் ரஜினிகாந்த்தின் மீதான பிரியம் காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக அதாவது 1990களில் துவங்கி இப்போது வரை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இதுவரை ரஜினிகாந்த் படம் வெளியானதும் சிறப்பாகக் கொண்டாடுவது, சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருவது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 1,30,000 உறுப்பினர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் தற்போது அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. கட்சியின் பெயர் சூப்பர்  ஸ்டார் மக்கள் கழகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ். முருகேஷ் கட்சியின் பெயரையும், கொடியையும் திருப்பூரில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்துப் பேசிய முருகேஷ், தொடர்ந்து மக்கள் சேவையை ஏற்று செய்து வருகிறோம். இதனை அரசியல் இயக்கம் மூலமாக வலுப்படுத்த உள்ளோம். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை முடிவெடுக்கவில்லை. அரசியல் தெரியாது.  மக்களிடைமே அரசியல் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் தேர்தலில் நிற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com