விருதுநகர் மாவட்டத்தி்ல உள்ள அந்தந்த பகுதி ரேசன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைக்கும் பணி வருகிற 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு வரையில் அரிசி மற்றும் பொதுவிநியோக திட்ட பொருள்கள் பெறும் வகையில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 214 குடும்ப அட்டைகள் உள்ளன. எப்பொருள்களும் வழங்காத நிலையில் முகவரிக்கு மட்டும் பயன்படுத்தப்படும் 1368 குடும்ப அட்டைகளும் உள்ளன.
தற்போது, நடைமுறையில் இருந்து வரும் குடும்ப அட்டைகளின் ஆயுள்காலம் இம்மாத இறுதியோடு முடிகிறது. இதைக்கருத்தில் கொண்டு மேலும் 31.12.2015 வரையில் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யும் வகையில் உள்தாள்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் மூலம் உள்தாள் இணைக்கும் பணி மேற்குறிப்பிட்ட நாளில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட வழங்கல் துறையின் மூலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யும் உள்தாள்களை போதுமான அளவுக்கு கூடுதலாகவே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனால், பொருள்கள் வாங்குவதற்காக செல்லும் போது தங்களது குடும்ப அட்டைகளில் கூடுதல் தாளை இணைத்துக் கொள்ளலாம் என பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

