விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கி கணக்கு திட்டத்தில் இதுவரையில் தொடங்காதவர்கள் கணக்கு தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் க.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாரத பிரதமர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் வங்கிக் கிளைகள் அனைத்தும் கடந்த ஆக.16ம் தேதி முதல் வங்கி கணக்குகள் இல்லாதவர்களுக்கு தொடங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த விவகார எல்லைக்கு உள்பட்ட வங்கிகளின் கணக்கெடுப்பின் படி அனைத்து குடும்பத்தினரும் கணக்கு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இம்மாவட்ட வங்கி கலந்தாய்வுக்குழுவும் வருகிற 24-ம் தேதி 100 சதவீதம் இலக்கை அடைந்து விட்டதாக அறிவிக்கவும் முடிவு செய்துள்ளது. எனவே இதுவரையில் தொடங்காதவர்கள் உடனே மேற்குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாகவே வங்கி கிளை அலுவலர்களை அணுகி கணக்குகளை தொடங்கும் படி அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.