விருதுநகரில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம்: 348 பேர் கைது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.முனியசாமி தலைமை வகித்தார். இதில், சத்துணவு ஊழியர்கள்
Updated on
1 min read

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 348 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.முனியசாமி தலைமை வகித்தார். இதில், சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். உணவூட்டும் செலவுத் தொகையினை ஒரு குழந்தைக்கு ரூ. 5 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும். தகுதியான சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முட்டையை அவித்து வழங்குவதற்கு தனியாக அரசு எரிபொருள் மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டவர்களை 256 பெண்கள் உள்பட 348 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com