விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் வாகன விபத்தில் அடையாளம் தெரியாத ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் மேம்பாலம் அருகே வாகன விபத்தில் தலை நசுங்கிய நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலையில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தாராம். இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கும், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்க்கையில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் உயிரிழந்து கிடந்ததார்.
இது தொடர்பாக அப்பகுதியில் இருந்தவர்களிடம் யார் என்பது குறித்து விசாரித்ததில் அடையாளம் தெரியவில்லை என்றனர். உடனே போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக துலுக்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் மற்றும் உயிரிழந்த பெண் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.