மதுரை அருகே ஆம்புலன்ஸ்- பஸ் மோதி நோயாளி சாவு

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை அரசு பஸ்-ஆம்புலன் மோதி நிகழ்ந்த விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த நோயாளி உயிரிழந்தார்.
Updated on
1 min read

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை அரசு பஸ்-ஆம்புலன் மோதி நிகழ்ந்த விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த நோயாளி உயிரிழந்தார்.

 மதுரை மாவட்டம் பேரையூர் சூலாபுரத்தைச் சேர்ந்தவர் பாலையா (68). இவருக்கு கடந்த சில நாள்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பேரையூர் பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு ஸ்கேன் எடுக்கவேண்டும் என மருத்துவர் கூறியதால், அங்கிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை வந்துள்ளனர். அண்ணாநகர் பகுதியில் பாலையாவுக்கு ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பினர்.

 ஆம்புலன்ஸ் பசுமலை மூலக்கரைப் பகுதியில் சென்றபோது எதிரே தென்காசியிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ் மோதியது. இதில் ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பாலையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கதிரேசன் (21), உதவியாளர் நல்லபாண்டி (27) மற்றும் நோயாளி பாலையாவுடன் வந்த பூசலாபுரத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் (26), ஜெயவீரன் (29) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போக்குவரத்துப் போலீஸôர் வழக்குப்பதிந்து அரசு பஸ் ஓட்டுநர் அம்பாசமுத்திரம் சீனிவாசனிடம் விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com