விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை அமைக்க வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று புதன்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை அரசு உத்தரவுப்படி தலைநகரில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கடந்த 27-ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து நீதிமன்றப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு விருதுநகர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்புராம் தலைமை வகித்தார்.
இப்பேரணி சாத்தூர் சாலையில் இருந்து நகராட்சி சாலை, பாத்திமா நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.