நாமக்கல்-திருச்சி சாலையில் நாகராஜபுரம் பகுதியில் சகுந்தலா(62) என்பவரின் வீட்டு மாடியில் 4 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்களது நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீஸார், சனிக்கிழமை பதல் 12.30 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட முயன்ற போது அந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார்.போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்து அழைத்துச்சென்றுள்ளனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகளையும், மூட்டையாக கட்டப்படிருந்த வெடி பொருட்கள் போன்ற மர்ம பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.4 பேரும் கல்லூரி மாணவர்கள் என்று கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கு தங்கியதாக கூறப்படுகிறது. தங்கியிருந்தவர்கள் யார், எந்த போலீஸார் கைது செய்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. உள்ளூர் போலீஸார் எங்களுக்கு எதுவும் தெரியாது என்கின்றனர். இதனால் இப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

