விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2013 வரை பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க அடுத்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி வரை அரசு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2013 வரை பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க அடுத்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி வரை அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2013 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், தங்களது பதிவை புதுப்பிக்கும் வகையில் அரசு சலுகை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைநாள்களில் தங்களது அடையாள அட்டையுடன் நேரில் வந்து பதிவு புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், அஞ்சல் மூலமாகவோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமோ புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து குறிப்பிட்ட நாள்களுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com