சுத்தியலால் அடித்து அண்ணன் கொலை தம்பி கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள  படைநிலை காலனி தெருவை சேர்ந்த ராசாங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி(48). இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில்
Published on
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே அண்ணனை சுத்தியலால் அடித்து கொலை செய்த தம்பியை மீன்சுருட்டி போலீசார் ஞாயிற்றுகிழமை கைதுசெய்தனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள  படைநிலை காலனி தெருவை சேர்ந்த ராசாங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி(48). இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும் தம்பி மனைவி கசப்பாயிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த தம்பி சக்ரவர்த்தி(48) பலமுறை அண்ணனை கண்டித்துள்ளார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தம்பி மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஞாயிற்றுகிழமை அதிகாலை 3.30 மணியளவவில் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த அண்ணனை தலையில் சுத்தியலால் தாக்கினார். இதனால் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுகிழமை இரவு 7 மணியளவில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸார் சக்கரவர்த்தியை கைதுசெய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com