ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில பொதுச்செயலாளர் மாயமலை, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகனவள்ளித்தாயார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாவட்ட பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.