விருதுநகரில் நான்கு வழிச்சாலையில் நகருக்குள் செல்லும் அணுகுசாலையோரத்தில் மணல் சரிவை தடுப்பதற்கான சிமெண்ட் கற்களை பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் 4 வழிச்சாலை மேலே கரைப்பகுதியிலிருந்து மழைக்காலங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டு நகருக்குள் செல்லும் அணுகுசாலையில் வந்து விழுகிறது. இதனால் அச்சாலையில் வாகனங்கள் அவசரமாக செல்கையில் திடீரென ஈரமண் காரணமாக சறுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. அதேபோல், வெயில் நேரத்தில் அதிகமான தூசி பறக்கும் சாலையாகவும் இருக்கிறது. இவைகளை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் அணுகுசாலையில் ஓரத்தில் மேலேயிருந்து மணல் அரிப்பை தடுக்கும் வகையில் ஓரப்பகுதிகளில் சிமெண்ட் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நகருக்குள் செல்லும் இச்சாலையை அகலப்படுத்த நடவடிககை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சாலைப்பணிகளில் ஈடுபடும் பொக்லைன் வாகனங்கள், ரோடு ரோலர்கள் ஆகதிய வாகனங்களை நிறுத்துவதற்காக இடையூராக இருந்ததாக கூறி அதை அகற்றி மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே உள்ள் நான்கு வழிச்சாலையில் முகப்பு பகுதியில் குவித்து வைத்தனர். ஆனால், சாலைப்பணிகள் முடிந்து சென்ற நிலையிலும் இதுவரையில் மண் அரிப்பை தடுக்கும் சிமெண்ட் கற்களை பதிக்கப்படாமல் இருப்பதாகவும், இரவு நேரங்களில் செல்கிறவர்கள் விபத்தினால் சேதமடைந்த கம்பிகளையும், சிமெண்ட் கற்களையும் எடுத்து சென்று விடுவதாகவும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் அழகுசுந்தரம் கூறுகையில், குறிப்பிட்ட பகுதியில் சாலையின் மேல் பகுதி கரையில் மணல் அரிப்பை தடுப்பதற்காக சிமெண்ட் கற்கள் அணுகுசாலையில் ஓரத்தில் பதிக்கப்பட்டன. ஆனால், சாலை பராமரிப்பு பணிகளுக்காக இதையெடுத்து ஓரப்பகுதியில் குவித்து வைத்தனர். அதனால் மீண்டும் மண் விழுந்து விபத்துக்களை ஏற்படும் சூழ்நிலையிருக்கிறது. அதனால், விபத்துக்களினால் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளதையும், சிமெண்ட் தடுப்பு கற்களையும் உடனே சரிசெய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலக பொறியாளர் ஒருவர் கூறுகையில், சாலையோரத்தில் மணல் அரிப்பை தடுக்கும் வகையில் சிமெண்ட் கற்கள் பதிக்கவும், விபத்துக்களினால் சேதமடைந்த பாதுகாப்பு தடுப்பு கம்பிகளையும் சரி செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

