விருதுநகர் அருகே மர்ம காய்ச்சலால் சிறுவன் பாதிப்பு

விருதுநகர் அருகே சிறுவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே சிறுவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதிகளில் தட்ப வெப்ப சூழ்நிலையால் கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் ராஜபாளையம் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதித்த கார்த்திகா(10) என்ற சிறுமி உயிரிழந்தார். இதேபகுதியில் வெள்ளிக்கிழமை மேலும் 7 வயது சிறுமி ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார். மர்ம காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் காய்ச்சலுக்கான காரணங்கள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் மருத்துவக்குழுவினர் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியைச் சேர்ந்த பாலசுந்தரராஜ் மகன் பாலகிருஷ்ணன் என்ற 4 வயது சிறுவனுக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு  அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, உடனே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகி்ச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் வச்சக்காரப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கழிவு நீர் வாய்க்கால், தெருக்கள் குப்பைகள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தும், தெருவோரங்களில் பிளிச்சிங் பவுடர் தூவுதல் போன்ற சுகாதார நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com