அரசிடமிருந்து கோயில்களை மீட்க போராட்டம் நடத்தப்படும்: விஷ்வ ஹிந்து பரிஷத்
சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் முன்னிலை


அரசாங்கத்திடமிருந்து கோயில்களை மீட்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மாநில அமைப்புச் செயலாளர் குமரன்ஜி தெரிவித்தார்.
சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் ஜி.தண்டபாணி வரவேற்றார். செயற்குழுக் கூட்டத்தில் மாநில அமைப்புச்செயலாளர் குமரன்ஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:
இளைஞர்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து தேசத்தை கவுரவிக்க வேண்டும். இந்து அறநிலையத்துறையில் உள்ள கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக மீட்டும் கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் கோயில்களை மீட்க மாபெரும் போராட்டத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் என குமரன்ஜி பேசினார்.
கூட்டத்தில் பாஜக விவசாய அணி நிர்வாகி பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ஜெயகோபால், சரவணப்பெருமாள், சுரேஷ், பாலரவி, பார்த்தீபன், சுமோசக்தி, பாண்டியன், குமாரசாமி தீட்சிதர், கோவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பஜ்ரங்தல் மாவட்ட தலைவர் ஜி.குருமூர்த்தி நன்றி கூறினார். நகரில் மரக்கன்றுகளை நட்டு வரும் சமூக ஆர்வலர் பொறியாளர் கே.ராஜாவிற்கு பசுமை பிரம்மா என்ற பட்டம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், சிதம்பரம் நகரில் குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்தி சுகாதாரமான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்க வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும், சுற்றுலா ஸ்தலமான சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...