விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல் போராட்டம்:196 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 196 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதை தொ.மு.ச, சி.ஐ.டி.யு தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 11-சங்கத்தின் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க விடாமல் 2-வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், விருதுநகரிலும் திங்கள்கிழமை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்தில் மொத்தம் 430 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதில், 293 பேருந்துகள் வரையில் வழக்கம் போல் இயக்கப்பட்ட நிலையில், 137 பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதையடுத்து, பேருந்துகளை இயக்கத்தை தடுக்கும் வகையில் பணிமனை முன்பு தொ.மு.ச சங்கத்தின் மாவட்ட செயலாளர் பால்பாண்டி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால், அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதனால், திடீரென எஸ்.பி.ஐ வங்கி வளாகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் போக்குவரத்து தொழிலாளர்களை 65 பேரையும் கைது செய்தனர். இதேபோல், சாத்தூர்-41, சிவகாசி-31, ஸ்ரீவில்லிபுத்தூர்-35, ராஜாபாளையம்-24 உள்பட மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 196 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பேருந்துகளில் கூட்டம்: ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் பேருந்து நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் பேருந்துகளை எதிர்பார்த்து பயணிகளின் கூட்டம் அதிகம் இருந்தது. இதை குறைக்கும் வகையில் தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளில் பொதுமக்களை போலீஸார் ஏற்றி கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், ஒவ்வொரு பேருந்துகளிலும் கூட்டம் இருந்ததால் அதிகம் வசூலானது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com