ஆண்டிபட்டி அருகே மதுபாட்டில்கள் விற்பனை: இருவர் கைது

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை செவ்வாய்கிழமை கடமலைக்குண்டு போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை செவ்வாய்கிழமை கடமலைக்குண்டு போலீஸார் கைது செய்தனர்.

கடமலைக்குண்டு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடமலைக்குண்டு மஞ்சகுப்பம் கண்மாய் பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த பாலூத்தை சேர்ந்த முருகன்(34) என்பவரை கைது செய்தனர்.

அதே போல் கடமலைக்குண்டு டிகேஆர் திருமண மண்டபத்திற்கு பின்புறம் கடமலைக்குண்டை சேர்ந்த முருகன்(30)என்பவர் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தார்.இதனையடுத்து இவரையும் போலீஸார் கைது செய்து,விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com