விருதுநகர் அருகே குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம்

விருதுநகர் அருகே லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் சமுதாயக் கூடத்தில்  செவ்வாய்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விருதுநகர் அருகே லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் சமுதாயக் கூடத்தில்  செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவரும், பொறியாளருமான கண்ணன் தலைமை வகித்தார். இதில், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் மூக்கையா, ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாரதிசுப்புராம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படாத தெருக்களில் விரைவில் அடிப்படை வசதிப்பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதேபோல், சிறப்பாக வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்தவர்களை பாராட்டி பொன்னாடையும் அணிவித்தனர். இதில், லட்சுமி நகர் நூலக அறக்கட்டளை தலைவர் மலையப்பன், ராஜீவ்காந்தி குடிநீர் திட்ட நிர்வாகிகள் மலையரசன், பொன்னுச்சாமி, முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com