அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருநெல்வேலியில் கேஜ்ரிவாலை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரது பெயர்களை வெளியிட்டு இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 8:57 am

முத்துகுமார்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரது பெயர்களை வெளியிட்டு இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேஜ்ரிவாலை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு பேசியதாவது:

ஊழலை வேரறுப்போம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் மக்கள் மன்றத்தில் நன்மதிப்பை பெற்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி பிரபலமாக முயல்கிறார். ஆட்சி, அரசின் அதிகாரம் தெரியாமல் பேசுகிறார். ஊழலைத் தடுக்க தெருவுக்கு வந்து  முதல்வர் போராடத் தேவையில்லை. மாறாக சட்டங்களை இயற்ற வேண்டும். நிர்வாகத்தின் நடைமுறை தெரியாமல் கேஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் பேசுவதும் போராடுவதும் தொடர்ந்து வருகிறது. இது மக்களுக்கு எதிரானது. கேஜ்ரிவாலின் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் அவர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் ராம்நாத், கிழக்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி துறைமுக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுத்தமல்லி முருகேசன், அமீர்கான், சரவணன்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.