

மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சில விமானங்கள் சென்று வருகின்றன. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவேற்பதற்காக பொதுமக்கள் விமான நிலையத்திற்க்கு வருகின்றனர்.
இவர்களுக்கு பார்வையாளர்கள் அறை வரை செல்ல 45 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஆனால் திடீர் என கட்டணச்சிட்டு வாங்கியவர்களையும் அடையாள சீட்டு இல்லை என்றால் அனுமதிக்க முடியாது என கூறி வெளியே அனுப்பி விடுகின்றனர்.
ஆனால் அடையாள சீட்டு குறித்து எந்த வித அறிவிப்பும் விமான நிலையத்தில் வைகப்படவில்லை இதுபோல ஏராளமானபேர்
சீட்டு வாங்கியும் உள்ளே செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். இதுகுறித்து விமான நிலைய டெரிமினல் கண்காணிப்பாளர் சிவக்குமாரிடம் கேட்ட போது பாதுகாப்பு கருதி கட்டுபாட்டுகள் விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து முறையான அறிவிப்பு எழுதி வைக்கப்படும் என்றார். ஆனால் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு எந்த வித கட்டுப்பாடும் நிபந்தனைகளும் விதிப்பதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.