குடிபோதையில் மனைவியை அரிவாளல் வெட்டிய கணவன் கைது

விருதுநகர் அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசனின் மனைவி சின்னம்மாள்(40). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
Updated on
1 min read

விருதுநகர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் செவ்வாய்கிழமை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர் அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசனின் மனைவி சின்னம்மாள்(40). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதோடு, இவரது மனைவி வேலைக்குச் செல்லும் இடங்களில் மற்ற ஆண்களுடன் பேசுவராம். இதில் சந்தேகமடைந்த கணவர் குடும்ப பிரச்னை செய்து வந்தாராம். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். சின்னம்மாள் நடத்தை குறித்து தவறாக பேசி தகராறு செய்துள்ளார்.

அதையடுத்து ஆத்திரம் அடைந்த அருகில் கிடந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்டியுள்ளார். இதை தடுக்க முயற்சி செய்யும் போது கை விரல் துண்டானது. அதேபோல் உடலில் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.  இது குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து படுகாயம் அடைந்த சின்னம்மாள் விருதுநகருக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சூலக்கரை போலீஸார் வழக்கு பதிந்து கணவர் கணேசனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com