வங்கி ஊழியர்கள் போராட்டம்: விருதுநகர் மாவட்டத்தில் ரூ.500 கோடி பணபரிவர்த்தனை முடங்கியது 

வங்கிகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ.
Updated on
1 min read

வங்கிகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ.500 கோடி அளவிலான பணபரிவர்த்தனை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளின் சீர்திருத்த மசோதவை உடனே திரும்ப பெற வேண்டும். வங்கிகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வேண்டும். ஊதிய ஒப்பந்தம் காலவதியாகி 15 மாதங்கள் வரையில் ஆனதால், 10-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள் மற்றும்  ஊழியர்கள் ஆகியோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக  ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளின் 126 கிளைகள் மற்றும் தனியார் வங்கிகளும் செயல்படவில்லை. இதுபோன்ற காரணத்தால் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் பணம் செலுத்த முடியாமலும், சேமிப்பு செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. அதேபோல், காசோலை, வங்கி வரைவோலை போன்றவைகளை பணமாக்க முடியாமல் வணிக நிறுவனங்கள். சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதேபோல், டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தை அன்றைய நாளிலேயே வங்கிகளில் செலுத்த வேண்டும். இப்போராட்டத்தினால் பணத்தை செலுத்த முடியாமல் மேற்பார்வையாளர் தனது சொந்த பொறுப்பில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதேபோல்,

அவசரத் தேவைக்கு ஏ.டி.எம் மையங்களுக்கு எடுக்கச் சென்றால் அங்கும் செவ்வாய்கிழமை அதிகாலையோடு பணம் இல்லாமல் இருந்தது.

இப்போராட்டம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக ரூ.500 கோடி அளவிற்கு பணபரிவர்த்தனைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com