முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நட்சத்திரமான மாசி மக நாளையொட்டி, நாகை மற்றும் திருக்கடையூர் கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு மேற்கொண்டனர்.
நாகை சௌந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் நாகை மாவட்ட அதிமுக சார்பில் சுதர்சன யாகம் நடத்தி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கே.ஏ. ஜெயபால், அவரது மனைவி கண்ணகி ஜெயபால், முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், அதிமுக தொகுதி செயலாளர் ஆசைமணி, நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நகரச் செயலாளர் ஆர். சந்திரமோகன், ஒன்றியச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகம் மற்றும் வழிபாட்டில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.