மதுரை அருகே லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கவுந்தம்பட்டியை சேர்ந்த கண்ணன் அதே பகுயில் கடந்த 2008ம் ஆண்டு 7 செண்ட் நிலம் வாங்கி உள்ளார்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கவுந்தம்பட்டியை சேர்ந்த கண்ணன் அதே பகுயில் கடந்த 2008ம் ஆண்டு 7 செண்ட் நிலம் வாங்கி உள்ளார்.

அதை அளவீடு செய்ய உசிலம்பட்டி வட்டாட்சீயர் அலுவலகத்தில் உள்ள சர்வேயர் பிரிவில் மனு செய்துள்ளார். அங்கு சர்வேயராக இருந்த விஜயகுமார் அளவீடு செய்ய ரூ 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறாது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு செய்த நிலையில் 4 ஆயிரம் கொடுத்தால்தான் அளவீடு செய்வோம் என கூறியதால் கண்ணன் மதுரை மாவட்டம் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு இசக்கி ஆனந்தன் உத்தரவின் பேரில் ரசாயனம் தடவிய பணம் கண்ணனிடம் அளிக்கப்பட்டது. இன்று காலை லஞ்ச பணத்தை கண்ணன் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வேயர் பிரிவில் இருக்கும் விஜயகுமாரிடம் வழங்கினார்.

அபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவினர். விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com