மதுரையில் திமுக வட்டசெயலாளர் வீட்டில்  பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை அண்ணாநகர் வைகை காலனியை சேர்ந்தவர் மருதுபாண்டியன் இவர் 32வது வட்ட திமுக செயலாளராக உள்ளார்.
Updated on
1 min read

மதுரை அண்ணாநகர் வைகை காலனியை சேர்ந்தவர் மருதுபாண்டியன் இவர் 32வது வட்ட திமுக செயலாளராக உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடந்த திமுக மாநாட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் அவரது வீட்டு வாசலில் வெடிசத்தம் கேட்டுள்ளது. அவர் வந்து பார்த்த போது  வீட்டு முன் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது பாட்டில் உடைந்த நிலையில் கிடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த அண்னாநகர் போலீசார் அங்கு வந்து விசாரித்த போது மர்ம நப்ர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருப்பது தெரியவந்தது. மதுரையில் திமுகவில் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். மருதுபாண்டியன் ஸ்டாலின் கோஷ்டியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

அதே வார்டில் உள்ள மு.க அழகிரி தரப்பினர் இவரை மாநாட்டுக்கு செல்ல கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று காலையில் பெட்ரோல் குண்டு வீசபட்டுள்ளது. இதற்கு உள்கட்சி மோதலே காரணம் என கட்சியினரும் போலீஸாரும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com