ராஜபாளையம் அருகே வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்க ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

இது குறித்து ராஜபாளையம் அருகே மேலபாட்டகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாற்றுத்திறனாளி மா.பாலு ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்குறிப்பிட்ட
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே பொதுமக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

இது குறித்து ராஜபாளையம் அருகே மேலபாட்டகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாற்றுத்திறனாளி மா.பாலு ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்குறிப்பிட்ட கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு என்னுடன் 200 உறுப்பினர்கள் சேர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் மற்றும் ராஜபாளையம் வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக மறுபடியும் மனு அளித்ததோடு, வாக்காளர் அடையாள அட்டைகளையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்.

கடந்த ஆண்டு 17.9.2013 அன்றைய நாளில் தலைமைச் செயலகத்தில் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளரை சந்தித்து மனு அளித்து குடும்ப அட்டைகளை ஒப்படைத்தோம். ஆனால், அதிகாரிகள் அதை வாங்க மறுத்துவிட்டனர். அதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சம்பந்தபுரம், மேலபாட்டகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பாதை புறம்போக்கு காலியிடத்தையும், வடக்கு வெங்காநல்லூர் கிராமத்தில் 2.50 ஏக்கர் தீர்வை ஏற்பட்ட தரிசு உள்ள நத்தமாக மாற்றி தலா 2 செண்ட வீதம் ஆவணம் செய்து தருவதாக அதிகாரிகள்  உறுதியளித்தனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து பேசிய போது, 200 பேருக்கு பட்டா நிலம் வழங்க முடியாது. தகுதியானவர்களின் பட்டியலை அளிக்குமாறு கேட்டார். பின்னர் 146 பேர் கொண்ட பட்டியலை முழு விவரங்களுடன் அளித்தோம். மேலும், மறுபடியும் சந்தித்து கேட்டதற்கு உடனே செய்து கொடுக்க முடியாது எனக் கூறி காலதாமதம் செய்து இலவச பட்டா வழங்க மறுத்து வருகின்றனர். இதேபோல், ராஜபாளையம் சமத்துவபுரத்தில் 80 வீடுகளில் ஆள்கள் யாரும் குடியேறாத காரணத்தால் புதர் மண்டிப்போய் காட்சியளிக்கிறது. இது குறித்து விசாரித்து எங்களைப்போல் நிலம், வீடு இல்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் மாற்றுத்திறனாளி பாலு தெரிவி்த்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com