பத்து ரூபாய்த்தாளுக்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சத்தை இழந்தார் பால்காரர்

மதுரை அருகே வங்கியில் பணம் எடுத்துவந்த பால்காரரிடம் பத்து ரூபாய்த்தாளை காட்டிய மர்மநபர் அவர் பையிலிருந்த ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு
Updated on
1 min read

மதுரை அருகே வங்கியில் பணம் எடுத்துவந்த பால்காரரிடம் பத்து ரூபாய்த்தாளை காட்டிய மர்மநபர் அவர் பையிலிருந்த ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

  மதுரை மாவட்டம் திண்டியூரைச் சேர்ந்தவர் ராஜு. பால்காரர். இவர் கருப்பாயூரணியில் உள்ள பொதுத்துறை வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். வங்கிக்கு செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த ராஜு தனது சேமிப்பிலிருந்து ரூ.1.05 லட்சம் எடுத்துள்ளார். பணத்தை மஞ்சள்பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தவர் மோட்டார் சைக்கிள் கேன்பாரில் மாட்டியுள்ளார்.

 அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் வந்து கீழே பத்து ரூபாய்த்தாள்கள் சிதறிக்கிடப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். உடனே பணப்பையை விட்டுவிட்டு சிதறிக்கிடந்த பத்துரூபாய்த்தாள்களை ராஜு எடுத்துள்ளார்

  அவர் பத்து ரூபாய்த்தாள்களை எடுத்து நிமிரும்போது மஞ்சள்பையில் இருந்த பணத்தை எடுத்த மர்மநபர் அருகே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த 2 பேருடன் சேர்ந்து வேகமாகச் சென்றுவிட்டார்.

  இதனால் அதிர்ச்சிóயடைந்த ராஜு தனது பையைப் பார்த்தபோது அதில் ரூ.5 ஆயிரம் மட்டுமே எஞ்சியிருந்தது. நூதனமுறையில் தன்னை ஏமாற்றிய மர்மநபர்கள் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜு அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணிப் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com