விருதுநகர் அருகே போலீஸார் வாகனத் தனிக்கையின் போது ரூ.49.35 லட்சம் பறிமுதல்

விருதுநகரில் இரவு நேரங்களில் குடிபோதையில் விதிமுறை மீறி வாகனங்களை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு புகார்
Updated on
1 min read

விருதுநகர் அருகே வாகனத் தனிக்கையின் போது சிக்கிய ரூ.49.35 லட்சம் ரொக்கப்பணத்தையும், வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகரில் இரவு நேரங்களில் குடிபோதையில் விதிமுறை மீறி வாகனங்களை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் சூலக்கரை வரையில் இரவு நேரம் அதிகம் பேர் செல்கின்றனர். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் இரவு முதல் காலை வரையில் தொடர்ந்து ரோந்து மற்றும் வாகனத்தணிக்கையி்ல் போலீஸார் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்கிழமை அதிகாலையில் அவ்ழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஒரு வாகனம் போலீஸாரை பார்த்ததும் கடந்து செல்ல முற்பட்டது. அதையடுத்து விரைந்து சென்று அந்த வாகனத்தை சுற்றி வளைத்தனர். வாகனத்தைச் சோதனையிட்டத்தில், உள்ளே பெட்டி இருப்பதை அறிந்து திறந்த பார்த்த போது கட்டுக்கட்டாக ரூ.49.35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பணம் தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரணை செய்தனர். அதில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் விஜயராகவன்(27) என்றும், சென்னையிலிருந்து-திருநெல்வேலிக்கு செல்வதாகவும் குறிப்பிட்டு, அதையடுத்து  முன்னுக்கு பின் முரனான தகவல்களை அளித்தாராம்.

இது தொடர்பாக உடனே காவல் ஆய்வாளர் அன்னராஜ், காவல் சார்பு ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர். வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை உடனே வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என எஸ்.பி உத்தரவிட்டார். அதையடுத்து காவல் துறை அதிகாரிகள் விருதுநகர் வருமான வருவாய்த்துறை அதிகாரிகளை காவல் நிலையத்தி்ற்கு வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தினர் விஜயராகவன் மீது வழக்கு பதிந்து கைது செய்ததோடு, பணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com