விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டுக் கதவின் கொண்டியை உடைத்து 5 சவரன் நகை, மடிக்கணினி மற்றும் ரொக்கம் ஆகியவைகளைச் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் புது ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் ராஜன்(45). இவர் ரயில்வே துறையில் செக்கப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு புத்தாண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்கச் சென்றாராம். பின்னர் பூஜைகளை முடித்துக் கொண்டு அதிகாலையில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, கதவு கொண்டி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 சவரன் நகை, மடிக்கணினி மற்றும் ரொக்கம் ரூ.1000 ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.
இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் ராஜன் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பூட்டியிருந்த வீட்டின் கொண்டியை உடைத்து நகை உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.