

புத்தாண்டு கொண்ட்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்து சிதறி ரேசன் கடையில் விழுந்ததால் சாக்குபைகள் மற்றும் 53 அரிசி மூட்டைகள் ஆகியவை கருகி சேதம் அடைந்தன.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு புதுவருட பிறப்பு கொண்ட்டாடத்துக்காக இரவு 11.30 மணிக்கு மேல் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது, அதிலிருந்து சிதறிய தீ ரேசன் கடை வாரந்தாவில் வைத்திருந்த சாக்கு கட்டுகளில் விழுந்ததை அடுத்து தீ மளமளவென அரிசி மூட்டைகளுக்கு பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு முன்பாக முன்புற கேட்டை திறந்து தீயை அணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் உள்ளே பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த 50 கிலோ கொண்ட 53 மூட்டை அரிசி தீயில் கருகி நாசமானது. இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.