உழவர் சந்தையை அகற்ற முயற்சி: நகராட்சிக்கு திமுக கண்டனம்

சாலை விரிவாக்கத்துக்காக நாமக்கல் உழவர் சந்தையின் ஒருபகுதியை அகற்ற நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள நடவடிக்கைக்கு திமுக கண்டனம்
Updated on
1 min read

சாலை விரிவாக்கத்துக்காக நாமக்கல் உழவர் சந்தையின் ஒருபகுதியை அகற்ற நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள நடவடிக்கைக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் பாலு தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான கணேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் உழவர் சந்தை முகப்பில் இடம் பெற்றிருந்த திமுக தலைவரின் பெயர் அழிக்கப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் உழவர் சந்தையின் நுழைவு வாயிலை அகற்ற உள்ளனர். இந்நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவிக்கிறது. செலம்பகவுண்டர் பூங்காவின் வடமேற்கு திசையிலுள்ள சுற்றுச்சுவரை 40 மீட்டர் நீளத்துக்கு எடுத்து நேர் செய்தால் சாலை ஒரே நேராக அமையும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

35 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொசவம்பட்டி ஏரி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே கொசவம்பட்டி ஏரியை சுத்தப்படுத்தி பொழுதுபோக்கு பூங்கா, புறநகர் பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கலாம் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய பொருளாளர் மாரப்பன், துணை செயலர் லட்சுமிபரமசிவம், செயற்குழு உறுப்பினர்கள் பாலு, தியாகராஜன், திருப்பதி, இளைஞரணி நிர்வாகி பிரபு, குமார், நடேசன், சுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com