வீடுகள் கட்டும் திட்டத்தில் 95 சதவிகிதம் பணிகள் நிறைவு: அமைச்சர் முனுசாமி தகவல்

பசுமை வீடுகள் கட்டும் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புகள் கட்டும் திட்டம் ஆகியவற்றில் 2012-13-ஆம் ஆண்டுக்கான பணிகளில் 95 சதவிகிதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக
Updated on
1 min read

பசுமை வீடுகள் கட்டும் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புகள் கட்டும் திட்டம் ஆகியவற்றில் 2012-13-ஆம் ஆண்டுக்கான பணிகளில் 95 சதவிகிதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

  திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

  கிராமங்களின் முன்னேற்றத்துக்காக கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட பசுமை வீடுகள் திட்டத்தில் 10,275 வீடுகளும், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தில் 16223 வீடுகளும், தாய் திட்டத்தில் 8191 பணிகளும், ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 2318 பணிகளும் 100 சதவிகிதம் முடிவடைந்துள்ளன.

  2012-13ஆம் நிதியாண்டில் 10,387 பசுமை வீடுகள் கட்டவும், 8153 இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்ட வீடுகளும், தாய் திட்டத்தில் 8153 பணிகளும், ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் 1397 பணிகளும் எடுக்கப்பட்டு, அதில் 95 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

  மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க முனைப்புடன் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே முடிக்கும் செயல் பாராட்டுக்குரியது என்றார் முனுசாமி.

  ஆய்வுக் கூட்டத்தில், மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மாநகர மேயர் அ. ஜெயா, மாநிலங்களவை உறுப்பினர் டி. ரெத்தினவேல், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் சி. விஜயராஜ்குமார், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ப்ரஜேந்திர நவநீத், மகளிர் திட்ட மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன், எம்எல்ஏக்கள் என்.ஆர். சிவபதி, மு. பரஞ்ஜோதி, ஆர். சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com