மதுரையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 100க்கும்மேற்பட்ட வெளிநாட்டவர்க்கு அலங்காநல்லூர் புதுப்பட்டியில் பொங்கல் கலாச்சார வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழர் கலாச்சாரத்தை அறியும் வகையில் வெளிநாட்டவரை புதுப்பட்டி மக்கள் கிராமிய முறைப்படி மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 650 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் 600க்கும் மேற்பட்ட்ட காளைகள் பங்கேற்றன.
இந்த நிகழ்ச்சியில் மாடுகள் முட்டி 5 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க 623 மாடுபிடி வீரர்கள் வந்திருந்த நிலையில் 569 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபட்டது.
மேலும் உலகப்புகழ் பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிகட்டு நிகழ்ச்சி நாளை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.