அனுமதியின்றி மது விற்பனை செய்த 29 பேர் கைது

விருதுநகர் மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றதாக 29 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு கூடுதல் விலைக்கு விற்பதற்காக
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றதாக 29 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு கூடுதல் விலைக்கு விற்பதற்காக மறைத்து வைத்திருந்த 1586 மதுபாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடந்த மிலாது நபி, திருவள்ளுவர் தினம் ஆகிய 14,15 ஆகிய நாள்களில் அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பார் நடத்துகிறவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மொத்தமாக மதுப் பாட்டில்களை வாங்கி வெளிநபர்கள் மூலம் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி விற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் ரோந்து செல்வதற்கு எஸ்.பி மகேஸ்வரன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆத்துப்பாலம், முக்கிய சந்திப்பு பகுதி மற்றும் அரசு மதுபானக் கடை பார் பின்புறம் உள்ளி்ட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்த 1586 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே கடந்த புதன்கிழமை இதேபோல் கள்ளத்தனமாக விற்பனை செய்த 32 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 343 மதுப் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com