உயர்நீதிமன்ற 12 நீதிபதிகளின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகரில் வழக்குரைஞர்களின் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை நீதிமன்றங்களை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குறைஞர்களை மட்டுமே நீதிபதிகளாக தேர்வு செய்து வருகின்றனர். அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்குரைஞர்களையும் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடத்திற்கு தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.தற்போது, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 12 பேரின் நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வழக்குகள் விசாரணை நடைபெறாமல் இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.