இளம்பெண்ணை குடும்பத்தோடு தாக்கியதாக சித்த மருத்துவர் உள்பட 6 பேர் கைது

விருதுநகர் அருகே கூரைக்குண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ்(43). இவர் எம்.புதுப்பட்டி பகுதியில் சித்த மருத்துவ நிலையம் நடத்தி வருகிறார். இவரது சித்த மருத்துவமனையில் குல்லூர்சந்தை அகதிகள்
Updated on
1 min read

விருதுநகர் அருகே இளம்பெண்ணை குடும்பத்தோடு தாக்கிய சம்பவம் தொடர்பாக சித்த மருத்துவர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து  போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே கூரைக்குண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ்(43). இவர் எம்.புதுப்பட்டி பகுதியில் சித்த மருத்துவ நிலையம் நடத்தி வருகிறார். இவரது சித்த மருத்துவமனையில் குல்லூர்சந்தை அகதிகள் முகாமைச் சேர்ந்த புஷ்பலதா(24) என்பவர் வேலை செய்து வந்தாராம். இவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாதச் சம்பளம் தராமல் ஏமாற்றி கண்டபடியும் பேசினாராம். இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் அடிக்கடி செல்பேசியில் தொடர்பு கொண்டு வேலைக்கு வராதற்காக திட்டினாராம். அதேபோல், சனிக்கிழமையும் செல்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதை புஷ்பலதாவின் சகோதரர் லவ்லிகரன்(28) எடுத்த நிலையில் கண்டபடி பேசி தகராறு செய்துள்ளார். அதோடு, சித்த மருத்துவர் செல்வராஜ், அவரது மனைவி தனலட்சுமி உள்ளிட்ட உறவினர் 6 பேருடன் காரில் குல்லூர்சந்தை முகாமில் இருந்த புஷ்பலதா, தாயார் மற்றும் சகோதரரையும் சேர்த்து தாக்கினார்களாம். அதோடு, பிரச்னையை தீ்ர்த்து வைக்க வந்த முகாம் தலைவர் செல்வக்குமார்(35) தாக்கினார்களாம்.

இது தொடர்பாக புஷ்பலதா விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் செல்வரா்ஜ், அவரது உறவினர்களான பாலமுருகன்(32), மாரிமுத்து(30), கார்த்திக்(30), முத்து(27), காளிராஜ்(29) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தலைமறைவான சித்த மருத்துவரின் மனைவி தனலட்சுமியை தேடி வருகின்றார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com