மதுரை: லாரி மோதி 2 பேர் சாவு

மதுரை அனுப்பானடி சௌராஷ்டிர காலனி பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பு மகன் ராமு (43). அதே பகுதி முத்தையா காம்பவுண்டைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இருவரும் ரியல் எஸ்டேட் தொழில்
Updated on
1 min read

மதுரை அருகே லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பலத்த காயமடைந்து வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தனர்.

மதுரை அனுப்பானடி சௌராஷ்டிர காலனி பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பு மகன் ராமு (43). அதே பகுதி முத்தையா காம்பவுண்டைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்துள்ளனர். சிலைமான் பகுதிக்கு சனிக்கிழமை பகலில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் மாலையில் மதுரை திரும்பியுள்ளனர். ராமு மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்துள்ளார்.

அவர்களிருவரும் மதுரை விரகனூர் ராமநாதபுரம் சாலையில் உள்ள லாரிகள் நிறுத்துமிடம் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதாம். இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களிருவரையும் அவசர ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதையடுத்து பழனிச்சாமி, ராமு சடலங்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மதுரை ஊரகப் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் 4 பேரும், நகரில் 3 பேரும் விபத்தில் உயிரிழந்திருப்பதாக போலீஸார் கூறினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com