சிறைக்குள் கைதிகள் மோதல்: காயமடைந்தவருக்கு சிகிச்சை

மதுரை வில்லாபுரம் கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் காந்தி (26). கீரைத்துறை, அவனியாபுரம் காவல் நிலையங்களில் பதிவான குற்ற வழக்கில் கைதான இவர் மதுரை மத்திய சிறையில்
Updated on
1 min read

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

மதுரை வில்லாபுரம் கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகன் காந்தி (26). கீரைத்துறை, அவனியாபுரம் காவல் நிலையங்களில் பதிவான குற்ற வழக்கில் கைதான இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர் சிறையில் உள்ள மற்றொரு கைதியான குமாரிடம் திங்கள்கிழமை தனது காலில் எண்ணெய் தேய்த்துவிடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து குமார் எண்ணெய் தேய்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், தனக்கும் எண்ணெய் தேவை எனக்கூறி காந்தியிடம் குமார் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குமார் தாக்கப்பட்டார். அவருக்கு நெற்றி, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாம்.தகராறை அறிந்த சிறைக்காவலர்கள் காந்தியிடமிருந்து குமாரை விலக்கி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளனர். இச்சம்பம் குறித்து சிறை அலுவலர் பொறுப்பு அதிகாரி இளவரசன் அளித்த புகாரின்பேரில் நீதிமன்ற உத்தரவின்படி கரிமேடு போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com