விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரால் ஓட்டுநர், நடத்துநர் பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இப்பணிக்கான வயது வரம்பு மற்றும் பதிவு மூப்பு ஆகியவைகளை பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் பணி: இப்பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றும், 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அதோடு பிற்பட்ட வகுப்பினர் முஸ்லீம் 14.2.2007 வரையிலும், மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 3.5.2000 வரையிலும் பதிவு செய்திருக்க வேணடும்.
நடத்துனர் பணி: இப்பணி்க்கு 10-வது தேர்ச்சி பெற்று, நடத்துனர் உரிமம் பெற்றிருப்பது அவசியம் ஆகும். இதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் 30.9.1995 வரையிலும், அருந்ததியினர் 12.12.1996 வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 10.11.1999 வரையும் இருக்க வேண்டும்.
இதில் முன்னுரிமையுடையவர்களான கலப்பு திருமணம் புரிந்தவர்கள், முன்னாள், இந்நாள் படைவீரரைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் நடப்பு தேதி வரையிலும் இருக்கிறது. எனவே மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் பதிவு மூப்பிற்குள்பட்ட பதிவுதாரர்கள் தங்கள் பதிவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 23ம் தேதி பெயர் பரிந்துரை செய்யப்பட்டும் விவரங்களை நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருகின்றவர்களின் கோரிக்கை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.