மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தேனியில் பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது மினி பஸ் மோதல்: 15 பேர் காயம்

தேனியில் புதன்கிழமை பெரியகுளம் சாலையில் கான்வென்ட் மருத்துவமனை முன்பு, பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது மினி பஸ் மோதியதில் 15 பேர்

Updated On :22 ஜனவரி 2014, 1:56 pm

தேனியில் புதன்கிழமை பெரியகுளம் சாலையில் கான்வென்ட் மருத்துவமனை முன்பு, பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது மினி பஸ் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்.

     அல்லிநகரத்தில் இருந்து செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு தேனி நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது, பெரியகுளம் சாலையில் தேனியில் இருந்து பொம்மையகவுண்டன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ், கான்வென்ட் மருத்துவமனை முன்பு நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது விழுந்தது.

        ஆட்டோவில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகள் அல்லிநகரத்தைச் சேர்ந்த கோபிநாத்(10), ராகுல்(7), கோபிகா(10), ராஜபாண்டி(10), குபேந்திரன்(9), மோனிஸô(7), மிருதுளா(10), யுவஸ்ரீ(10), பாண்டிக்குமார்(10), யோகார்ஜூன்(8), மகேந்திரன்(11), பிரசன்னா(11), கோமலதா(9), பிரகாஷ்(9) ஆகிய 14 பேர் காயமடைந்தனர். ஆட்டோ ஓட்டுநர் அல்லிநகரத்தை சேர்ந்த வேல்முருகன்(37) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

     காயமடைந்த பள்ளிக் குழந்தைகளை பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்பு, குழந்தைகள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

      பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது மினி பஸ் மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நகர எல்லைக்குள் மினி பஸ்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக புகார் தெரிவித்து ஆட்டோ மீது மோதிய மினி பஸ்ஸை பொதுமக்கள் சிறைபிடித்து பெரியகுளம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸôர் பொதுமக்களை சமரசம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

       கான்வென்ட் பள்ளி அருகே போக்குவரத்து தடுப்புக் கம்பி உள்ள பகுதியை விரைந்து சென்று கடப்பதற்காக அதி வேகமாகச் சென்ற மினி பஸ், கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதாகவும், சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதாகவும் விபத்தினை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறினர்.

   இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து மினி பஸ் ஓட்டுநர் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராமசாமி(36) என்பவரை கைது செய்தனர். விபத்தை அடுத்து புதன்கிழமை பெரியகுளம் சாலையில் அல்லிநகரத்துக்கு மினி பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.