விருதுநகர் அருகே தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் அருகே அல்லம்பட்டியில் தனியார் பிளாஸ்டிக் பாலிபேக் நிறுவனத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலகத்தின் இணை இயக்குநர் வே.பெரியசாமி தலைமை வகித்தார். துணை இயக்குநர் வேலுமணி முன்னிலை வகித்தார். இதில், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், பிளாஸ்டிக் தயார் செய்யும் போது அதிகமான புகை வெளியேறும். அப்போது தொழிலாளர்கள் முக கவசம் அணிந்துதான் வேலைபார்க்க வேண்டும். புகையை போக்குவதற்கு கூடுதலாக மின்விசிறி வைத்து வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்கள் சுவாசிக்கும் போது உடநல பாதிப்பு ஏற்படும்.
மேலும், சூழ்நிலை சரியாக இருக்கும் படி நிர்வாகம் பார்த்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மின்வயர்கள் தொங்காமலும், மின்மோட்டார் உள்ள இடத்தில் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்திருக்கவும் வேண்டும். இயந்திரத்தில் கையாளும் போது கையில் கையுறை அணிந்து வேலை பார்க்க வேண்டும். தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தப்புவது என்பது குறித்து ஆண்டுக்கு ஒரு முறை தொழிலாளர்களுக்கு செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை குறித்து அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த முகாமில் அருகில் உள்ள பிளாஸ்டிக் பாலிபேக் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகள் தனியார் நிறுவனம் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை அலுவலக அலுவலர்கள் மற்றும் தனியார் பாலிபேக் நிறுவனத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.