சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சிலைத் திறப்பு நிகழ்ச்சி சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறினார் திமுகவின் எஸ்.ஆர்.சிவலிங்கம். இன்று காலை நாமக்கல்லுக்கு ஸ்டாலினை வரவேற்பதற்காக வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரபாண்டி ஆறுமுகம் சிலைத் திறப்பு விவகாரம் தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டலுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை நடத்துவோம் என்றார். ஏற்கெனவே இன்று காலை சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதி மறுப்பு நோட்டீஸை திமுகவினர் கிழித்து எறிந்துவிட்டனர். எனவே, சிலைத் திறப்பு நிகழ்ச்சி அனுமதியை மீறி நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.